'சனாதன தர்மம் மக்களை நல்வழிப்படுத்தும் வழிகளை கூறுகிறது' - சசிகலா பேட்டி

மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்த முடியாத திட்டம் என்று சசிகலா தெரிவித்தார்.

Update: 2023-09-10 09:58 GMT

காஞ்சிபுரம்,

சனாதன தர்மம் மக்களை நல்வழிப்படுத்தும் வழிகளை கூறுகிறது என்று சசிகலா தெரிவித்துள்ளார். இது குறித்து காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்களை நல்வழிப்படுத்துவதற்கான விஷயங்கள் எந்த மதத்தில் இருந்தாலும், அதை ஏற்றுக்கொள்வது நமக்கு நல்லது. சனாதன தர்மமும் அதே போன்ற நல்வழியைத் தான் கூறியுள்ளது" என்று தெரிவித்தார்.

மேலும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்த முடியாத திட்டம் என்று குறிப்பிட்ட சசிகலா, அரசாங்கத்தின் நிதிநிலை மிக மோசமாக இருப்பதாகவும், அரசை எப்படி நடத்த வேண்டும் என்பது தி.மு.க.வினருக்கு தெரியவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

Full View

  

Tags:    

மேலும் செய்திகள்