பெருமாள் கோவில்களில் தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்
பெருமாள் கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.;
புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி ராமநாத புரம் அருகே உள்ள திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவிலில் ஆதிஜெகநாத பெருமாள், பத்மாசனி தாயார், பட்டாபிஷேக ராமர், தர்ப்பசயனராமர், சந்தான கோபால கிருஷ்ணர் உள்ளிட்டோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பெருமாள் சன்னதி முன்பு பூதேவி, ஸ்ரீதேவி யுடன் முத்தங்கி சேவை அலங்காரத்தில் கல்யாண ஜெகநாத பெருமாள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடை பெற்றது.
பெருமாளைதரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்து இருந்தனர். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் கோவிலின் பேஷ்கார் கண்ணன் தலைமையில் பணியாளர்கள் பக்தர்களை வரிசையாக அனுப்பும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். தேவிபட்டினம் அருகே உள்ள சக்கரவாள நல்லூர் கிராமத்தில் உள்ள ஆதிகேசவர் பெருமாள் கோவிலிலும் பூதேவி ஸ்ரீதேவியுடன் காட்சி அளித்த பெருமாளுக்கு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை பூஜை நடைபெற்றன.
சக்கர வாளநல்லூர் கிராமத்தில் உள்ள ஆதிகேசவ பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.