அரிவாள்கள் மீது நின்ற சாமியாடியை 11 கி.மீ. ஊர்வலமாக சுமந்து வந்தனர்

அரிவாள்கள் மீது நின்ற சாமியாடியை 11 கி.மீ. ஊர்வலமாக பக்தர்கள் சுமந்து வந்தனர்.;

Update: 2022-08-10 17:29 GMT

சிங்கம்புணரி,


சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி கீழத்தெரு பகுதியில் மழுவேந்தி கருப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி மேலப்பட்டி ஊராட்சி பிள்ளையார்பட்டியில் இரண்டு அரிவாள்கள் மீது மழுவேந்தி கருப்பர் கோவில் சாமியாடி ஏறி நின்றார்.

அவரை பக்தர்கள் சுமந்து கொண்டு கிருங்காக்கோட்டை வழியாக சிங்கம்புணரி வந்தடைந்தனர். அங்கு பூஜைகள் நடைபெற்று கரகம் எடுத்து ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் சிங்கம்புணரி கீழத் தெருவில் உள்ள கோவிலை சென்றடைந்தது. இரண்டு அரிவாள்கள் மீது ஏறி நின்றிருந்த சாமியாடியை சுமார் 11 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் சுமந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அரிவாள்கள் மீது நின்றபடி சாமியாடி அருள்வாக்கும் கூறினார். இதே போல் பால்குடம், அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் வந்தனர். இதையடுத்து மழுவேந்தி கருப்பர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கிடாய் வெட்டி பொங்கல் வைத்து கருப்பருக்கு படையலிடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்