அரிவாளில் ஏறி ஊர்வலமாக வந்த சாமியாடி

சிங்கம்புணரி கோவில் விழாவில் அரிவாளில் ஏறி ஊர்வலமாக சாமியாடி வந்தார்;

Update:2023-07-27 00:15 IST

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி கீழத்தெருவில் உள்ள மழவேந்தி கருப்பணசுவாமி கோவிலில் ஆடி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவையொட்டி மேலப்பட்டி அருகே உள்ள பிள்ளையார்பட்டி மடத்தில் இருந்து சுவாமி அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. 2 அரிவாள் மத்தியில் அதன் மீது ஏறிய சாமியாடி தலையில் கரகம் வைத்து இருந்தார். அதனை தொடர்ந்து சாமியாடி அரிவாளில் நின்றவாறு காரைக்குடி சாலை மற்றும் பெரிய கடைவீதி சாலை வழியாக சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் முக்கிய வீதி வழியாக கோவிலை வந்து அடைந்தார். அதனைத்தொடர்ந்து அங்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இரவு கிடாவெட்டி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு முழுவதும் சாமி ஆட்டம் நடைபெற்று பக்தர்களுக்கு சாமியாடி அருள் வாக்கு கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை முருகேசன், பாலு, ரவி, தனபால், குமார் மற்றும் மேலப்பட்டி, பிள்ளையார்பட்டி, சிங்கம்புணரி வட்டார கிராம மருத்துவ சமுதாய மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்