கருடவாகனத்தில் சாமி வீதி உலா

பாண்டுகுடியில் கருட வாகனத்தில் சாமி திருவீதி உலா வந்தது.

Update: 2023-04-10 18:45 GMT

தொண்டி, ஏப்.11-

திருவாடானை தாலுகா பாண்டுகுடியில் ஆயிர வைசிய மஞ்சப்புத்தூர் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட லெட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஹரிராம பக்த பஜனை கூடத்தில் 100-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதனையொட்டி காரைக்குடி மாணவியர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் காக்கி வாடன்பட்டி ஸ்ரீ கிருஷ்ணா அமிர்தா பஜனை சபாவின் திவ்ய நாம பஜனை, பாண்டு குடி ராம பக்த பஜனை குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது. பின்னர் கருடவாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஆயிரவைசிய சமூக சபை தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் மதுரை ஆயிரவைசிய மஞ்சப்புத்தூர் மகாஜன சபையின் தலைவர் பாஸ்கரன், பரமக்குடி ஆயிர வைசிய சபை தலைவர் போஸ், மதுரை ஆயிர வைசிய சமுதாய நல பரிபாலன அறக்கட்டளை தலைவர் ராகவன், ஆயிர வைசிய சபைத்தலைவர்கள் ஜெயராமன், ராஜன், செந்தில் சூரியமூர்த்தி, கணபதி, ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பாண்டு குடி ஆயிர வைசிய சபைத் தலைவர் அரிவாசகன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்