ஆறுமுக சுப்பிரமணிய சாமிக்கு சிறப்பு அபிஷேகம்

Update: 2022-11-29 16:24 GMT


வெள்ளகோவில் அருகே உள்ள மயில்ரங்கம், வள்ளி தெய்வானை உடனமர் ஆறுமுக சுப்பிரமணியசாமிக்கு செவ்வாய்க்கிழமை தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நேற்று ஆறுமுக சுப்பிரமணிய சாமிக்கு தேன், பால், தயிர், பன்னீர், சந்தனம், கனி, மலர் உள்ளிட்ட 16 அபிஷேகம், அலங்காரம் 300 அர்ச்சனைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்