சீர்காழியில் சம்பா அறுவடை பணி பாதிப்பு
சீர்காழியில் சம்பா அறுவடை பணி பாதித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்;
சீர்காழி:
சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட சீர்காழி, புளிச்சக்காடு, வைத்தீஸ்வரன் கோவில், அகணி, கொண்டல், வள்ளுவக்குடி, ஆதமங்கலம், பெருமங்கலம், திருப்புங்கூர், கன்னியாகுடி, கற்கோவில், கதிராமங்கலம், எடக்குடி வடபாதி, மருவத்தூர், காரைமேடு, சட்டநாதபுரம், திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, திருமுல்லைவாசல், எடமணல், கடவாசல், விளந்திட சமுத்திரம், அத்தியூர், புங்கனூர், மருதங்குடி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் விவசாயிகள் கடந்த ஆண்டு சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த வரலாறு காணாத மழையாலும், கடல் நீராலும் சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களை விவசாயிகள் கூடுதல் செலவு செய்து மீதமுள்ள நெற்பயிர்களை காப்பாற்றினார். மீதமுள்ள நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக இருந்து. கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் சாய்ந்து வருகிறது. இதனால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.