சமயபுரம் மாரியம்மன் கோவில் சன்னதி வீதியில் தூண்கள் புதுப்பிக்கும் பணி தொடங்கியது

சமயபுரம் மாரியம்மன் கோவில் சன்னதி வீதியில் தூண்கள் புதுப்பிக்கும் பணி தொடங்கியது;

Update: 2023-06-19 19:06 GMT

சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுர கும்பாபிஷேகம் நிறைவு பெற்று புதுப்பொலிவுடன் கம்பீரமாக காட்சி தருகிறது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல பல்வேறு வசதிகளுடன் கூடிய வரிசை வளாகம் கட்டப்பட்டு கடந்த மாதம் பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பக்தர்கள் வரிசை வளாகம் வழியாக ராஜகோபுரம் வழியாக கோவிலுக்குள் சென்று அம்மனை வணங்கிய பிறகு அதே வழியில் சன்னதி வீதி வழியாக வெளியே செல்கின்றனர். இந்நிலையில், சன்னதி வீதியில் இரு பக்கத்திலும் உள்ள 64 தூண்களையும் கோவில் அமைப்பின்படி புனரமைப்பு பணி செய்ய ரூ.88 லட்சம் திட்ட மதிப்பீடு செய்து நிதி ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தூண்களைப் புதுப்பித்து கலை அழகுடன் சிமெண்டு பூச்சு பணி தொடங்கியது.பணி முடிந்தவுடன் வர்ணம் பூசும் பணி தொடங்கப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து, படிப்படியாக அடுத்தடுத்த வேலைகள் நடைபெறும் என்றும் கோவில் இணை ஆணையர் கல்யாணி விடுத்துள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்