பாலமுருகன் கோவிலில் சமபந்தி விருந்து
பாலமுருகன் கோவிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சமபந்தி விருந்து கோவிலின் அறங்காவலர் பாலமுருகன் அடிமை சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. இதில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன், ராணிப்பேட்டை உதவி கலெக்டர் பூங்கொடி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், ஆற்காடு ஒன்றியக் குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், துணைத்தலைவர் ஸ்ரீமதி நந்தகுமார், கோவில் செயல் அலுவலர் சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.