பொங்கல் பண்டிகையையொட்டி2 நாட்களில் ரூ.15¼ கோடிக்கு மது விற்பனை

சேலம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.15¼ கோடிக்கு மது விற்பனையானது.;

Update: 2023-01-17 19:30 GMT

சேலம், 

டாஸ்மாக் கடைகள்

சேலம் மாவட்டத்தில் 220 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 150-க்கும் மேற்பட்ட கடைகளில் பார் வசதி உள்ளன. தினமும் ரூ.4 கோடிக்கு மேல் மது விற்பனை நடப்பது வழக்கம். புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட கூடுதலாக மது விற்பனை நடைபெறும்.

இந்தநிலையில், கடந்த 14-ந் தேதி போகிப்பண்டிகையும், 15-ந் தேதி பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி விற்பனை அமோகமாக இருக்கும் காரணத்தால் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் முன்னதாகவே தேவையான மதுபாட்டில்கள் அனுப்பி வைத்து இருப்பு வைக்கப்பட்டன.

ரூ.15¼ கோடிக்கு விற்பனை

பொங்கல் பண்டிகையையொட்டி கிராமப்புறங்கள், நகர்ப்புறங்கள் என அனைத்து பகுதிகளில் உள்ள மதுக்கடைகளிலும் மதுப்பிரியர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் மது பாட்டில்கள் விற்பனை அமோகமாக இருந்தன.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறும் போது, பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விற்பனை கூடுதலாக இருந்தது. கடந்த 14-ந் தேதி ரூ.5 கோடியே 5 லட்சத்துக்கும், 15-ந் தேதி ரூ.10¼ கோடிக்கும் மதுவிற்பனை செய்யப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையைவிட கூடுதலாக மதுவிற்பனை நடந்துள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்