சேலம் மண்டல டாஸ்மாக் முதுநிலை மேலாளர் இடமாற்றம்

சேலம் மண்டல டாஸ்மாக் முதுநிலை மேலாளர் இடமாற்றம் செய்யப்பட்டார்.;

Update: 2023-03-09 23:09 GMT

சேலம்:

சேலம் மண்டல டாஸ்மாக் முதுநிலை மேலாளராக பணியாற்றி வந்தவர் ஜெயபாரதி. இவரது கட்டுப்பாட்டில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் தேனி மாவட்ட வருவாய் அலுவலராக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் தமிழ்நாடு சிமெண்டு நிறுவன பொது மேலாளராக பணியாற்றிய நர்மதாதேவி, சேலம் மண்டல டாஸ்மாக் முதுநிலை மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் நிலையில் பணிபுரிந்து வந்த அதிகாரிகளும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அரசு தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்