சேலம் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
பந்தலூர் அருகே சேலம் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பந்தலூர்,
பந்தலூர் அருகே நெல்லியாளம் டேன்டீ ரேஞ்ச் எண்.1-ல் முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள ஆலய மணியில் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதாக தேவாலா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சித்ரா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தியதில் சேலத்தை சேர்ந்த சப்ஹீர் (வயது 21) என்பவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. அவர் சில நாட்களாக உறவினர் வீட்டில் தங்கி வந்து உள்ளார். காதல் தோல்வியா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் தற்கொலை செய்தாரா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.