பராமரிப்பு பணி காரணமாகசேலம்-விருத்தாசலம் ரெயில் ரத்து

பராமரிப்பு பணி காரணமாக சேலம்-விருத்தாசலம் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.;

Update:2022-12-29 02:14 IST

சூரமங்கலம், டிச.29-

சேலம்-விருத்தாசலம் மார்க்கத்தில் சின்னசேலம்-புக்கிரவாரி ரெயில் நிலையங்களுக்கு இடையே நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு சேலம்-விருத்தாசலம் பயணிகள் ரெயில் (06896) மற்றும் விருத்தாசலம்-சேலம் பயணிகள் ரெயில் (06121) ஆகிய ரெயில்கள் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் காரைக்கால்-பெங்களூரு ரெயில் (16530) 1½ மணி நேரம் காலதாமதமாக இயக்கப்படும்.

இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்