விழுப்புரம் தங்கும் விடுதியில்சேலம் வாலிபர் தற்கொலை

விழுப்புரம் தங்கும் விடுதியில் சேலம் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-12-23 18:45 GMT


சேலம் மாவட்டம் அரியனூரை அடுத்த கோரத்துபாளிகாடு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன்(வயது 38). இவர் விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அறை எடுத்து தங்கியிருந்தார். நேற்று காலையில் இருந்து அந்த அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், விழுப்புரம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த அறையின் கதவை உடைத்து பார்த்தபோது லோகநாதன் அங்குள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து லாகநாதனின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்