தண்டவாள பராமரிப்பு பணி: சேலம்-கோவை சிறப்பு ரெயில் நாளை ரத்து
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சேலம்-கோவை சிறப்பு ரெயில் நாளை ரத்து செய்யப்படுகிறது.;
சூரமங்கலம்:
கோவை மாவட்டம் சூலூரில் கோவை-திருப்பூர் தண்டவாளப்பாதையில் பொறியியல் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையொட்டி கோவை- சேலம் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண் 06802) மற்றும் சேலம் -கோவை முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (06803) ஆகிய ரெயில்கள் நாளை (வியாழக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.
மேற்கண்ட தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.