சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கை 2 மாதங்களுக்குள் முடிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update: 2023-02-15 17:51 GMT

சென்னை,

பாஜக பாஜக பிரமுகர் மற்றும் ஆடிட்டர் ரமேஷ் என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் லால் மாலிக், பன்னா இஸ்மாயில், பக்ரூதின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது குறித்த வழக்கு சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ஆனபோதிலும் இன்னும் இந்த வழக்கு முடியாததை அடுத்து சென்னை ஐகோர்ட்டு பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவில் சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கை தினந்தோறும் விசாரித்து, 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்