போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் களைகட்டிய தேன் விற்பனை

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் களைகட்டிய தேன் விற்பனை

Update: 2022-06-29 16:51 GMT


கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பிரதான கட்டிடம் 5 தளங்களுடன் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் 10 இடங்களில் மலை தேனீக்கள் கூடு கட்டியிருந்தன. இதில் நேற்று 4 தேன் கூடுகளை கலைத்து வடமாநில வாலிபர்கள் தேன் எடுத்தனர். இதிலிருந்து எடுக்கப்பட்ட 40 கிலோ தேனை வட மாநில வாலிபர்கள் அங்கேயே விற்றனர். நேற்று கமிஷனர் அலுவலகத்தில் விறுவிறுப்பாக தேன் விற்பனை செய்யப்பட்டது.

கண் முன்பாகவே தேனடையை பிழிந்து எடுக்கப்பட்ட, கலப்படமற்ற தேன் என்பதால் போலீசார், கமிஷனர் அலுவலக அமைச்சுப் பணியாளர்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வமுடன் போட்டிப்போடடு வாங்கி சென்றனர். ஒரு கிலோ 650 ரூபாய் என்ற விலையில் தேன் விற்பனை செய்யப்பட்டது. தேன் மட்டுமின்றி தேனடைகளையும் ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். மொத்தம் ரூ.26 ஆயிரத்துக்கு விற்பனையானது. இந்த பணத்தை தேன் கூடுகளை எடுத்த வடமாநில வாலிபர்களிடம் போலீசார் வழங்கினர். மீதமுள்ள தேன் கூடுகள் இன்னும் சில நாட்களில் களைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

தேன் கூடுகள் கலைக்கப்பட்டதால் கலெக்டர் அலுவலகம் வரை தேனீக்கள் பறந்தன. கொட்டிவிடுமோ என்ற அச்சத்தில் தேனீக்களிடம் இருந்து பலரும் தப்பி ஓடினர்.

Tags:    

மேலும் செய்திகள்