அஞ்சல் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை
அஞ்சல் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை செய்யப்படுவதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
சுதந்திரதின பெருவிழாவை அனைத்து இல்லங்களிலும் தேசியக் கொடியை பறக்க விட்டு கொண்டாடிட பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய தேசிய கொடி அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் பொருட்டு திருப்பத்தூர் கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை, துணை, கிளை அஞ்சலகங்களிலும் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூபாய் 25 மட்டுமே. தேசியக் கொடியை http://www.epostoffice.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி தபால்காரர் மூலமாக தங்களின் வீடுகளுக்கே பட்டுவாடா செய்யும்படி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
எனவே பொதுமக்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களில் ரூ.25 மட்டும் செலுத்தி தேசியக்கொடியை பெற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் கொடுத்து சுதந்திர பெரு விழாவை இந்திய அஞ்சல் துறையோடு கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் மொத்தமாக தேசியக்கொடியை வாங்கிட விரும்பினால் திருப்பத்தூர் கோட்டத்தில் உள்ள திருப்பத்தூர் மற்றும் குடியாத்தம் தலைமை அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளவும்.
இத்தகவலை திருப்பத்தூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மு.மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.