கள்ளக்குறிச்சி மாவட்டதபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனைநாளை தொடங்குகிறது

கள்ளக்குறிச்சி மாவட்ட தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை நாளை தொடங்குகிறது.

Update: 2023-03-04 18:45 GMT


விருத்தாசலம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் ராஜரத்தினம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் ஆகிய 2 தலைமை தபால் நிலையங்கள் மற்றும் அனைத்து துணை தபால் நிலையங்களில் இந்திய ரிசர்வ் வங்கியின் தங்க பத்திரம் முதலீடு திட்ட விற்பனை நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. நேரடி தங்கத்தை கிராம் கணக்கில் வாங்குவது போல தங்க பத்திரத்தில் முதலீடு செய்ய முடியும். முதலீடு செய்த பணத்தின் மதிப்பு சந்தை விலைக்கு ஏற்றவாறு அதிகரிக்கும். ஒரு கிராம் விலை ரூ.5611 (24 கேரட்) தனிநபர் 1 கிராம் முதல் 4 கிலோ வரை தங்க பத்திரத்தில் முதலீடு செய்யலாம். தொண்டு நிறுவனங்கள் நிதியாண்டிற்கு 20 கிலோ வரை வாங்கிக் கொள்ளலாம். இந்த பத்திரத்தின் முதிர்வு காலம் 8 ஆண்டுகள் ஆகும். முதலீட்டாளருக்கு தேவை இருப்பின் 5 முதல் 7 ஆண்டுகளில் திட்டத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம். முதலீடு செய்தவர்களுக்கு ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும். இந்த வட்டி தொகை 6 மாதத்திற்கு ஒருமுறை பெற்றுக் கொள்ளும் வசதியும், தங்க பத்திரத்தின் பேரில் வங்கிகளில் கடன் பெறும் வசதியும் உள்ளது. தங்க பத்திர விற்பனை நாளை முதல் வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை 5 நாட்கள் மட்டுமே நடைபெறும்.

எனவே பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சிறப்பு தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு விற்பனை அலுவலர் நீலகண்டன் 8072294253 என்பவருடைய செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு கேட்டு அறியலாம். இவ்வாறு மேற்கண்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்