கள்ளச்சாராயம் விற்பனை - புகார் எண் அறிவிப்பு
மரக்காணம் கள்ளச்சாராய வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது.;
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததில் இன்று அதிகாலை வரையில் 14 பேர் உயிரிழந்தனர். 38-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி, புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக கள்ளச்சாராய வியாபாரிகளான அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இதில் அரசியல் கட்சியினர் யாருக்கேணும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மரக்காணம் கள்ளச்சாராய வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கள்ளச்சாராயம், விஷச்சாராயம் மற்றும் அயல்மாநில மதுபானங்கள் விற்பனை குறித்து 9042469405 என்ற வாட்சப் எண்ணிற்கு பொதுமக்கள் புகார் மற்றும் தகவல் தெரிவிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.