சத்தியமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.60½ லட்சத்துக்கு பருத்தி விற்பனை

சத்தியமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.60½ லட்சத்துக்கு பருத்தி விற்பனை;

Update: 2023-07-13 21:27 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 3 ஆயிரத்து 106 மூட்டைகளில் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.5 ஆயிரத்து 447-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 696-க்கும் என மொத்தம் ரூ.60 லட்சத்து 56 ஆயிரத்து 747-க்கு ஏலம் போனது.

Tags:    

மேலும் செய்திகள்