நெகமம் பகுதியில் கள் விற்பனை:மேலும் 5 பேர் கைது

நெகமம் பகுதியில் கள் விற்பனை:மேலும் 5 பேர் கைது

Update: 2022-10-26 18:45 GMT

நெகமம்

நெகமம் உதவிபாளையம் வாய்க்கால் மேடு தோட்டம் அருகே கள் விற்பனை செய்வதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் முகமது, போலீஸ்காரர் முருகேசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த மாசிலாமணி (வயது 52) என்பவர் 10 லிட்டர் கள் வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து கள் பறிமுதல் செய்தனர். மேலும் கொண்டேகவுண்டன்பாளையம் தடியன் தோட்டத்தில் லதா (40) என்பவர் கள் விற்பனை செய்து கொண்டு இருந்தார். அப்போது போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 10 லிட்டர் கள் பறிமுதல் செய்தனர்.மேலும் அதே பகுதியில் பால்காரர் தோட்டத்தில் பழனிச்சாமி (51), நெகமம் ஆவலப்பம்பட்டி செங்காடு தோட்டத்தில் திருமலைசாமி (52), சிவசாமி (54) ஆகியோர் பதுக்கி வைத்து கள் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 30 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்