நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும்

நீலகிரியில் தோட்ட தொழிலாளர்களுக்கு நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-09-20 22:30 GMT

ஊட்டி

நீலகிரி மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் நேற்று ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு செயலாளர் சங்கரலிங்கம் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் வினோத், பொருளாளர் நவீன் சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், தாய்சோலை, தேவர்சோலை, நாடுகாணி ஆகிய தேயிலை தோட்டங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் தனியார் தேயிலை எஸ்டேட் நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு முறையாக மாத சம்பளம் வழங்குவதில்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழிலாளர்துறையிடம் பலமுறை முறையிட்டும், பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் வழங்க வேண்டிய ஊதியத்தை இதுவரை வழங்கவில்லை. மேலும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடையும் பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்