புனித சவேரியார் ஆலய தேர்பவனி
நாகை காடம்பாடி புனித சவேரியார் ஆலய தேர்பவனியில் திரளானோர் கலந்து கொண்டனர்.;
நாகை காடம்பாடி புனித சவேரியார் ஆலய தேர்பவனியில் திரளானோர் கலந்து கொண்டனர்.
சவேரியார் ஆலயம்
நாகை காடம்பாடியில் உள்ள புனித சவேரியார் ஆலயத்தில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் ஆண்டுத்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடந்த மாதம் 24-ந் தேதி ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் நடந்தது. இதை முன்னிட்டு நவநாள் ஜெபம், திருப்பலி, கூட்டுப்பாடல் திருப்பலி உள்ளிட்டவை நடந்தது.
தேர்பவனி
இதை தொடர்ந்து புனித சவேரியார் தேரில் எழுந்தருளி தேர்பவனி நடந்தது. தோ் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. தேரின் பின்னால் திரளானோர் சென்றனர். நேற்று காலை சிறப்பு திருப்பலி நடந்தது.. பின்னர் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவுற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை மறை மாவட்ட அதிபரும், பங்குத் தந்தையுமான பன்னீர்செல்வம் அடிகளார் தலைமையில், உதவி பங்குத் தந்தை ராயல் பிரிட்டோ மற்றும் அருட் சகோதரிகள், சவேரியார் கோவில் தெரு மக்கள் செய்திருந்தனர்.