புனித பெரியநாயகி மாதா ஆலய தேர் பவனி

புனித பெரியநாயகி மாதா ஆலய தேர் பவனி நடைபெற்றது.;

Update:2023-04-18 01:05 IST

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் அருகே பெரியதம்பி உடையான்பட்டியில் புனித பெரிய நாயகிமாதா ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்சி மறைமாவட்ட பொருளாளர் அருட்தந்தை செல்வநாதன் தலைமையில் நடைபெற்ற திருவிழாவில் அருட்தந்தையர்கள் சவரிராஜ், அமல்ராஜ், தார்சியுஸ் ஆகியோர் இணைந்து கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து வாணவேடிக்கையுடன் புனித பெரியநாயகிமாதா திருவுருவம் தாங்கிய தேர்பவனியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்