சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் கடலோர பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை

சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் கடலோர பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை

Update: 2022-11-16 19:56 GMT

சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் கடலோர பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. அப்போது படகுகளை கடலோர காவல் குழுமத்தினர் சோதனை செய்தனர்.

பாதுகாப்பு ஒத்திகை

கடலோரப்பகுதிகளில் பயங்கரவாத ஊடுருவலை தடுக்கும் வகையிலும், சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையிலும், கடல்வழியாக போதைப் பொருள் கடத்தலை தடுக்கும் வகையிலும் ஆண்டுக்கு 2 முறையும், 6 மாதங்களுக்கு ஒரு முறையும் ஸ்ரீ விஜில் என்ற பாதுகாப்பு ஒத்திகை கடலோர காவல் படையால் நடத்தப்படுகிறது.

அதன் ஒருபகுதியாக பட்டுக்கோட்டை கடலோரக்காவல் படை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்ப சாமி, போலீஸ்காரர் வசந்த் ஆகியோர் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் பகுதியில் கடலுக்குள் சென்று ஆய்வு நடத்தினர்.

படகுகளை சோதனை

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவி வந்தால் அவர்களை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கடலோரக்காவல் குழுமத்தினர், தங்கள் ரோந்துப்படகின் மூலம் கடலுக்குச்சென்று மீன்பிடித்து வரும் படகுகளை சோதனை செய்தனர். அப்போது படகின் பதிவு எண், மீனவர்களுக்கு அடையாள அட்டை உள்ளதா என ஆய்வு செய்தனர்.

மேலும் கடல் பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமாக யாரேனும் தென்பட்டால், உடனடியாக கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

தீவிரவாத தடுப்பு

இ்தையொட்டி திருவாரூர் மாவட்ட எல்லையான தம்பிக்கோட்டை வடகாடு பகுதியில் இருந்து புதுக்கோட்டை மாவட்ட எல்லை தொடக்கமான கட்டுமாவடி வரை ஆங்காங்கே தடுப்பரண் அமைத்து, அந்த வழியாக சென்று வரும் வாகனங்களை சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் தீவிரவாத தடுப்பு, போதைப்பொருள் தடுப்பு நடந்தது. இந்த ஒத்திகையில் போலீஸ்துறையினர், கடலோர காவல் குழுமத்தினர், தீயணைப்புத் துறையினர், வருவாய்த்துறையினர், மீனவ பிரதிநிதிகள் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்