ரெயில் பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

அரக்கோணத்தில் ரெயில் பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;

Update: 2023-07-30 18:40 GMT

மனித கடத்தலுக்கு எதிரான தினம் ஜூலை மாதம் 30-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி அரக்கோணம் ரெயில்வே போலீஸ் நிலையம் சார்பில் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி தலைமையில், ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன், பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் அன்பு செழியன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்