முலாயம் சிங் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முலாயம் சிங் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான முலாயம்சிங், உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஆகஸ்டு 22-ந் தேதி டெல்லி அருகே குருகிராமில் உள்ள மெடண்டா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை மோசமடைந்ததால், கடந்த 2-ந் தேதி அவர் அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது. நேற்று அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. அவருக்கு உயிர் காக்கும் மருந்துகள் அளிக்கப்பட்டநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
உபி-ன் முன்னாள் முதல்-மந்திரியும், மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் மறைவு வருத்தம் அளிக்கிறது. இதர பிற்பட்டோர் வகுப்பினருக்காக பாடுபட்டவர். மதச்சார்பற்ற கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார் முலாயம் சிங். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என கூறியுள்ளார்.