மனைவி இறந்த சோகத்தில்தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை

கம்பத்தில் மனைவி இறந்த சோகத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-03-28 18:45 GMT

கம்பம் கோம்பைரோடு தெருவைச் சேர்ந்தவர் மாசாணத்தேவர் (வயது 77). இவரது மனைவி ராசாத்தி. கடந்த ஜனவரி மாதம் ராசாத்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் மாசாணத்தேவர் ஆஸ்துமா நோயால் அவதியடைந்து வந்தார். இந்நிலையில் மனைவியின் இறப்பு, நோயால் பாதிக்கப்பட்ட அவர் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீ்ட்டுக்குள் சென்றவர் வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது மாசாணத்தேவர் தூக்கில் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்த கம்பம் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்