சுடலைமாடன் சுவாமி கோவில் விழாவில் ஆடு, பன்றிகளை பலியிட்டு வழிபாடு

சுடலைமாடன் சுவாமி கோவில் விழாவில் ஆடு, பன்றிகளை பலியிட்டு வழிபாடு

Update: 2022-10-08 19:09 GMT

சாயல்குடி அருகே சுடலைமாடன் சுவாமி கோவில் விழாவில் ஆடு, பன்றிகளை பலியிட்டு வழிபாடு நடத்தினர்.

கோவில் திருவிழா

சாயல்குடி அருகே நரிப்பையூர் ஊராட்சி வெட்டுக்காடு கிராமத்தில் ஸ்ரீ சுடலைமாடன் சுவாமி, ஸ்ரீகட்டேறும் பெருமாள் சுவாமி கோவில் 15-ம் ஆண்டு கோவில் திருவிழாவை முன்னிட்டு 51 பன்றிகள், 21 ஆடுகளை பலியிட்டு பக்தர்களுக்கு 1100 கிலோ அசைவ விருந்து பரிமாறப்பட்டது.

திருவிழாவை முன்னிட்டு தீர்த்தக்கரை சென்று தீர்த்தம் கொண்டுவரப்பட்டு சுடலை மாடன், கட்டேறும் பெருமாள் சுவாமிகளுக்கு சாம பூஜை சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்பு நடு இரவில் பன்றிகளை சுவாமிக்கு பலியிட்டு அதனை சமையல் செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவது வழக்கமாக உள்ளது.

பக்தர்கள்

இதில் சுற்று வட்டார கிராமங்கள் மட்டுமன்றி தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

நரிப்பையூர் ஊராட்சி தலைவர் நாராயணன் கோவில் நிர்வாக தலைவர் வேலுச்சாமி, செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் தம்பிராஜ், நிர்வாகிகள் ராஜ்குமார், விஜய், சண்முகவேல் முத்துக்குமார், சக்கரவர்த்தி, பூபாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்