கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
கோவில்பட்டி:
கோவில்பட்டி கோட்ட அஞ்சல் அலுவலகம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினா். ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட துணைத் தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.
கிராமிய அஞ்சல் ஊழியர்களை புதிய கணக்குகள் பிடிப்பதற்காக நெருக்கடி கொடுப்பதை கண்டித்தும், இந்த நெருக்கடியை நிறுத்த கோரியும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கோட்ட செயலாளர் பூ ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.