ஊரக வளர்ச்சி துறை உதவி என்ஜினீயர்கள் பணியிட மாற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை உதவி மற்றும் இளநிலை என்ஜினீயர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2023-09-28 20:05 GMT


விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை உதவி மற்றும் இளநிலை என்ஜினீயர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.

காரியாபட்டி

அதன் விவரம் வருமாறு:-

காரியாபட்டி யூனியன் உதவி என்ஜினீயர் காஞ்சனா தேவி நரிக்குடி யூனியனுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நரிக்குடியில் பணியாற்றிய இளநிலை என்ஜினீயர் பிரபா காரியாபட்டி யூனியனுக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றிய உதவி என்ஜினீயர் மாரியம்மாள் ஸ்ரீவில்லிபுத்தூர் உபகோட்ட அலுவலகத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் உபகோட்டத்தில் பணியாற்றிய உதவி என்ஜினீயர் ஸ்வீட்டி வில்லியம்ஸ், ஸ்ரீவில்லிபுத்தூர் பஞ்சாயத்து யூனியனுக்கு பணியிட மாற்றம் பெற்றுள்ளார். விருதுநகர் யூனியனில் பணியாற்றிய புஷ்பகலா, காரியாபட்டி யூனியனுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சாத்தூர்

காரியாபட்டியில் பணியாற்றிய உதவி என்ஜினீயர் ராஜ்குமார் வத்திராயிருப்பு யூனியனுக்கும், வத்திராயிருப்பில் பணியாற்றிய இளநிலை என்ஜினீயர் ஜெயா திருச்சுழி யூனியனுக்கும், திருச்சுழியில் பணியாற்றிய உதவி என்ஜினீயர் அர்ஜுனன் நரிக்குடி யூனியனுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சாத்தூரில் பணியாற்றிய உதவி என்ஜினீயர் நாராயணசாமி சிவகாசி உப கோட்ட அலுவலகத்திற்கும், சிவகாசி உப கோட்ட அலுவலகத்தில் பணியாற்றிய பாலாஜி சாத்தூர் யூனியனுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்