ஊரக வளர்ச்சி முகமை திட்டஉதவி செயற்பொறியாளர்கள் இடமாற்றம்
நெல்லை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட உதவி செயற்பொறியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலக உதவி செயற்பொறியாளர் இளநிலைவரை தொழில்அலுவலர் கணேசன், களக்காடு யூனியன் பணி பார்வையாளராகவும், களக்காடு யூனியன் பணிபார்வையாளர் நல்லையா பீட்டர், நாங்குநேரி யூனியன் பணிபார்வையாளராகவும், நாங்குநேரி யூனியன் பணி பார்வையாளர் பாலசுப்பிரமணியன் நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலக உதவி செயற்பொறியாளர், இளநிலைவரை தொழில்அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலக உதவி செயற்பொறியாளர் இளநிலைவரை தொழில்அலுவலர் சங்கரசுப்பிரமணியன், அம்பை யூனியன் பணி பார்வையாளராகவும், அம்பை யூனியன் பணிபார்வையாளர் உதயகுமார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலக உதவி செயற்பொறியாளர், இளநிலைவரை தொழில்அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை கலெக்டர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.