ருத்ர மகா காளியம்மன் கோவில் திருவிழா

வங்காரம்பேட்டை ஆற்றங்கரை ருத்ர மகா காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது.;

Update: 2023-04-23 20:35 GMT

மெலட்டூர்:

பாபநாசம் தாலுகா வங்காரம்பேட்டை ஆற்றங்கரை தெருவில் உள்ள ருத்ர மகா காளியம்மன் ேகாவில் 7-ம் ஆண்டு திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு காலையில் குடமுருட்டி ஆற்றில் இருந்து பக்தர்கள் சக்தி கரகம். பால்குடம், அக்னிசட்டி, சூலம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும், கஞ்சி வார்த்தலும் நடைபெற்றது. இதில் வங்காரம்பேட்டை மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்