ரூ.7 லட்சம் மோசடி; மீன் கடை உரிமையாளர் கைது

ரூ.7 லட்சம் மோசடி செய்ததாக மீன் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-07-28 22:00 GMT

துறையூர்:

துறையூரை அடுத்த சின்ன சேலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கவுரி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்ததாகவும், அவர் கவுரியை திருமணம் செய்ய மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இருவரையும் சேர்த்து வைக்க போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க மீன் கடை உரிமையாளரான சிங்களாந்தபுரத்தை சேர்ந்த சுரேந்தர் என்பவரை உதவிக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இது தொடர்பான நடவடிக்கை மற்றும் வக்கீல் கட்டணம் என்று கூறி ரூ.7 லட்சம் வரை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று சுரேந்தர் மீது கவுரி, துறையூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து சுரேந்தரை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்