ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்

வலங்கைமானில், மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என பருத்தி விவசாயிகள் கோரிக்கை ஊர்வலம் நடத்தினர்.;

Update: 2023-05-22 18:45 GMT

வலங்கைமான்:

வலங்கைமானில், மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என பருத்தி விவசாயிகள் கோரிக்கை ஊர்வலம் நடத்தினர்.

பருத்தி சாகுபடி

வலங்கைமானில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக பருத்தி வயல்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. இதையடுத்து அப்பகுதி விவசாயிகள் நிவாரணம் கேட்டு, அரசுக்கு கவனம் ஈர்க்கும் வகையில் கோரிக்கை ஊர்வலத்தை நடத்தினர்.

அந்த ஊர்வலத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா விவசாயிகள் சங்க மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் தலைமையில், திருவாரூர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் கிருஷ்ணமணி, வலங்கைமான் ஒன்றிய தலைவர் அன்பழகன், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட பிரதிநிதிகள் வைத்தியநாதன், ராஜா ஆகியோர் முன்னிலையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

கடும் சேதம்

வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் கும்பகோணம் ரோடு, கடைத்தெரு வழியாக வலங்கைமான் தாசில்தார் அலுவலகத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தின் போது விவசாயிகள் சாகுபடி செய்து இருந்த பருத்தி செடிகள், தற்போது விட்டு விட்டு பெய்த மழையால் கடும் சேதத்தை அடைந்துள்ளது. அதனால் பெரும் பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது என கூறியதுடன், பல்வேறு இன்னல்களுக்கிடையே கடன் வாங்கி சாகுபடி செய்திருந்த பருத்தி செடிகள் சேதம் அடைந்ததால், வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க விவசாயிகள் நலன் காக்கும் வகையில், அரசு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமாக வழங்க முன் வர வேண்டும் எனவும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்