தனியார் நிதிநிறுவனத்தில் ரூ 9.65 லட்சம் கையாடல்; மேலாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
தனியார் நிதிநிறுவனத்தில் ரூ 9.65 லட்சம் கையாடல் செய்ததாக மேலாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;
கல்லக்குடி, ஜூன்.4-
கல்லக்குடி பஸ்நிலையம் அருகே தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் மண்டல மேலாளர் நாகமணி திடீரென ஆய்வு மேற்கொண்டார் அப்போது, இங்கு மேலாளராக பணிபுரியும் நாமக்கல் மாவட்டம் நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்த தினேஷ் குமார் (வயது 30) என்பவர் தனது அண்ணன்பெயரில் கணக்கு தொடங்கி நகை அடகு பெற்றதுபோல் ரூ.9 லட்சத்து 64 ஆயிரத்து 500 கையாடல் செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இதற்கு அலுவலர்கள் 2 பேர் உடந்தையாக இருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலதி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் விசாரணை நடத்தி நிதி நிறுவன கிளை மேலாளர் தினேஷ்குமார், அவரது அண்ணன் முத்துக்குமார், அலுவலர் கோபிநாத் ஆகியோர்மீது வழக்குப்பதிவு செய்தனர்.