ரூ. 64¾ லட்சம் நஷ்ட ஈடு வழங்க கோர்ட்டு உத்தரவு
தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ. 64¾ லட்சம் நஷ்ட ஈடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.;
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ராஜபாளையம் புதுப்பாளையம் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). இவர் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவர் செண்பகத்தோப்பு பகுதியில் காரில் வரும்போது ஏற்பட்ட விபத்தில் பலியானார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து விபத்தில் பலியான சுரேசின் குடும்பத்திற்கு ரூ. 64 லட்சத்து 75 ஆயிரத்து 672 நஷ்ட ஈடாக வழங்க தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.