ரூ. 42 லட்சத்தில் புதிய ஊராட்சி செயலக கட்டிடம்
வள்ளுவகுடியில் ரூ. 42 லட்சத்தில் புதிய ஊராட்சி செயலக கட்டிடம் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் வள்ளுவக்குடி ஊராட்சியில் ஊராட்சி செயலக கட்டிடம் கட்டுவதற்கான தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர் இளங்கோவன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சரவணன், சீர்காழி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பத்மா வரவேற்றார். விழாவில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ரூ. 42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள ஊராட்சி செயலக கட்டிடத்திற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இதில் தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் முருகன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பிரபாகரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். முடிவில் ஊராட்சி செயலர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.