தனியார் செல்போன் கோபுரத்தில் ரூ.30 லட்சம் உபகரணங்கள் திருட்டு
கடுவனூரில் தனியார் செல்போன் கோபுரத்தில் உள்ள ரூ.30 லட்சம் மதிப்புள்ள உபகரணங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செல்போன் கோபுரத்தில் இருந்த டவர், பேட்டரி உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை மர்ம மனிதர்கள் திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.30 லட்சத்து 18 ஆயிரத்து 438 இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து அந்த செல்போன் நிறுவனத்தின் அதிகாரி சென்னை, கீழ்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக்(வயது 29) கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் கோபுரத்தில் இருந்த உபகரணங்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.