கார் வாங்கி தருவதாக ரூ.25½ லட்சம் மோசடி - 3 பேர் கைது

அருமனை அருகே கார் வாங்கி தருவதாக ரூ.25½ லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-06-21 18:45 GMT

அருமனை:

அருமனை அருகே கார் வாங்கி தருவதாக ரூ.25½ லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அருமனை அருகே இடைக்கோடு மலமாரி பகுதியைச் சேர்ந்தவர் இன்பதாஸ் (வயது 54). இவர் புதிய கார் வாங்க டேவிட் தாஸ் என்பவரை அணுகினார். இதற்காக ஒரு லட்சம் ரொக்கமாகவும் மற்றும் ரூ.24½ லட்சத்தை வங்கி கணக்கு மூலமாகவும் கொடுத்துள்ளார். ஆனால் இன்பதாசுக்கு குறிப்பிட்ட காரை வாங்கி கொடுக்காமல் 2 வருடங்களாக ஏமாற்றி வந்துள்ளார். இதற்கு சிலர் உடந்தையாகவும் இருந்துள்ளனர்.

இதுதொடர்பாக நாகர்கோவில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்பதாஸ் புகார் செய்தார். பின்னர் அருமனை போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

விசாரணையில் கார் வாங்கி கொடுக்காமல் மோசடி செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கார் புரோக்கர் டேவிட் தாஸ், கார் நிறுவன மேலாளர் மற்றும் சிபின், அகஸ்டின், சில்வெஸ்டர், மில்லர் மணி ஆகிய பேர் மீது அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சிபின், அகஸ்டின், சில்வெஸ்டார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்