இருசக்கர வாகன ஷோரூமில் ரூ.15 லட்சம் மோசடி

கள்ளக்குறிச்சியில் இருசக்கர வாகன ஷோரூமில் ரூ.15 லட்சம் மோசடி விற்பனை மேலாளர் மீது வழக்கு

Update: 2023-02-26 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் உள்ள தனியார் இருசக்கர வாகன ஷோரூமில் விழுப்புரம் மாவட்டம் வி.புதுப்பாளையத்தை சேர்ந்த விவேகானந்தன் மகன் பிரபு திருநாவுக்கரசு என்பவர் விற்பனை மேலாளராக கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர் ஷோரூமில் உள்ள அனைத்து வரவு-செலவு கணக்குகளையும் நிர்வகித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் சுமார் 15 பேரிடம் முழு பணத்தையும் பெற்றுக் கொண்டு வாகனங்களை விற்பனை செய்த அவா் வாங்கிய பணத்தை ஷோரூம் கணக்கில் கட்டவில்லை. ஆனால் பணத்தை கட்டியதாக போலியான ஆவணத்தை தயார் செய்து சுமார் ரூ.15 லட்சத்தை பிரபு திருநாவுக்கரசு மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமான கணக்குகளை ஷோரும் நிர்வாக இயக்குனர் லட்சுமிபிரசாத் கேட்டபோது அவர் கணக்கை சரியாக கொடுக்காமல் திடீரென ஷோரூமை விட்டு ஓடி விட்டார். அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து ஷோரூம் நிர்வாக இயக்குனர் கொடுத்த புகாரின் பேரில் பிரபு திருநாவுக்கரசு மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்