ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் சென்றால் ரூ.10 ஆயிரம் அபராதம்: தமிழ்நாடு அரசு அரசாணை

சாலைகளில் ஆம்புலன்ஸ் செல்லும்போது வழிவிட தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் நடைமுறைக்கு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டள்ளது.;

Update:2022-10-20 11:40 IST

சென்னை,

வாகங்கள் பெருக்கத்தால் நாளுக்கு நாள் சாலைகளில் போக்குவரத்து நேரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் விபத்தால் விலைமதிப்பற்ற மனித உயிரிகளை இந்த உலகம் இழந்து வருகின்றது. போக்குவரத்து நேரிசலால் ஏற்படும் விபத்தை காட்டிலும் குடிபோதையில் இயக்கப்படும் வாகனங்களால் தான் விபத்துக்கள் அதிகம் நடக்கின்றது.

இதனை கட்டுப்படுத்தும் விதாமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் விபத்தில் ஏற்படும் மரணங்களை குறைப்பதில் ஆம்புலன்ஸ் சேவை முக்கிய பங்கு வகுக்கிறது. இத்தகைய ஆம்புலன்ஸ் சேவையை விரைவுப்படுத்த பல நடவடிக்கைள் எடுக்கப்படுட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சாலைகளில் ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்கள் செல்லும் போது வழிவிடாமல் செல்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதேபோல், தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடத் தவறினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் குறித்த அரசாணையில், தேவையின்றி ஒலிப்பானை இயக்கி சத்தமெழுப்பினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வாகனத்திற்கு வெளியே சரக்குகள், கம்பிகள் இருந்தால் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்