மாணவி பிரியாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மாணவி பிரியாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும், அவரது சகோதரர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முடிவு எடுத்து உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Update: 2022-11-16 00:06 GMT

சென்னை,

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடலுக்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நிவாரணமும், அரசு வேலையும்...

மாணவி பிரியா சரியானவுடன் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டீனிடம், அந்த மாணவிக்கு பேட்டரி கால்களை வாங்கித்தர அறிவுறுத்தியிருந்தோம். இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்தநிலையில், இன்று (நேற்று) அந்த குழந்தையின் இறப்பு என்பது மிகப்பெரிய அளவில் காயப்படுத்தி உள்ளது.

முதல்-அமைச்சர் கவனத்திற்கு அந்த குடும்பத்தின் ஏழ்மை நிலையை எடுத்துக்கூறி தமிழக அரசின் நிவாரணமாக ரூ.10 லட்சம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அதேபோன்று மாணவியின் சகோதரர்கள் 3 பேரில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு உத்தரவாதம் வழங்கலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்