நீரில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நீரில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.;

Update: 2023-04-25 07:49 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

சேலம் மாவட்டம், சேலம் வட்டம் கன்னங்குறிச்சி தாமரைநகர் என்ற இடத்திலுள்ள புது ஏரியில் 22-4-2023 அன்று குளிக்கச் சென்ற கன்னங்குறிச்சி கிராமம். கோவிந்தசாமி காலனியைச் சேர்ந்த பிரசாந்த் (வயது 17) மற்றும் பாலாஜி, (வயது 16) ஆகிய இரண்டு மாணவர்களும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

இதேபோல் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் வி குமாரமங்கலம் கிராமம் பெரியகாலனியைச் சேர்ந்த தினேஷ் (வயது 14) மற்றும் இன்பரசன் (வயது 8) ஆகிய இருவரும் 23-4-2023 அன்று அதே கிராமத்திலுள்ள ஏரியில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினையும் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.

உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு எனது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்