ரூ.1 கோடியே 12 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் ரூ.1 கோடியே 12 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டுயொட்டி நடந்த முகாமில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி பங்கேற்று 129 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 12 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
அப்போது மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே. எல். ஈஸ்வரப்பன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், திட்ட இயக்குனர் லோகநாயகி, உதவி கலெக்டர் பூங்கொடி, ஆற்காடு ஒன்றிய குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், துணைத் தலைவர் ஸ்ரீமதி நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.