கூரை வீட்டில் தீ

கடலூர் அருகே கூரை வீட்டில் தீ;

Update: 2023-07-24 18:45 GMT

கடலூர் முதுநகர்

கடலூர் அருகே உள்ள புருகீஸ்பேட்டை, கேப்பர் மலை ரோடு பகுதியை சேர்ந்தவர் தயாளன் (வயது 54). இவரது கூரை வீடு நேற்று மதியம் திடீரென தீ பற்றியது. இதுபற்றி அறிந்த கடலூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் கூரை வீடு மற்றும் அங்கிருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்