மின் கசிவால் கூரை வீடு எரிந்து நாசம்

சீர்காழி அருகே மின் கசிவால் கூரை வீடு எரிந்து நாசம் அடைந்தது;

Update: 2022-12-10 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆற்றங்கரை தெருவை சேர்ந்த கண்ணன் மனைவி கீதா (வயது 40). இவர் கூரை வீட்டில் வசித்து வந்தார். நேற்று அவரது கூரை வீடு மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. இந்த பகுதியினர் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசம் அடைந்தன. இது குறித்து தகவல் அறிந்த பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள், பாய்மற்றும் அரசின் நிவாரண உதவிகளை வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்