விஷம் குடித்து காதல் ஜோடி தற்கொலை முயற்சி

செஞ்சி அருகே விஷம் குடித்து காதல் ஜோடி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனா்.;

Update: 2022-06-04 17:43 GMT

செஞ்சி:

செஞ்சி அருகே உள்ள அவியூர் கிராமத்தை சேர்ந்தவர் ரகுவீரன் மகன் பிரதீப்குமார்(வயது 24). இவரும், அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவியும் காதலித்து வந்தனர். பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிந்ததும் மாணவி, தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அந்த மாணவியை போலீசார் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் பிரதீப்குமாரும், அந்த மாணவியும் அம்மாகுளம் சுடுகாடு அருகே விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தனர். இருவரையும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்