வாமனபுரீஸ்வரர் கோவிலில் ரோகிணி தீபம் ஏற்றம்

திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவிலில் ரோகிணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2022-12-07 19:43 GMT

நெல்லிக்குப்பம், 

கடலூர் அடுத்த திருமாணிக்குழியில் பிரசித்தி பெற்ற வாமனபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் கடந்த 27-ந்தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது. மேலும் நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று ரோகிணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து நடராஜர் தேரடி பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

ரோகிணி தீபம்

தொடர்ந்து கோவில் முன்பு உள்ள மலை உச்சியில் அமைக்கப்பட்டிருந்த நெய் கொப்பரையில் ரோகிணி தீபம் ஏற்றப்பட்டது‌. அப்போது அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா, அரோகரா என்ற பக்தி கோஷம் எழுப்பி ரோகிணி தீபத்தை தரிசனம் செய்தனர். கோவிலில் இன்று (வியாழக்கிழமை) ஸ்ரீ சந்திரசேகரர் கிரி பிரதட்சணமும், நாளை (வெள்ளிக்கிழமை) ஸ்ரீ சண்டேஸ்வரர் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்